ஞாயிறு, 3 நவம்பர், 2019

தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறந்தவர்களும், மீட்கப்பட்டவர்களும்!!

      தமிழகத்தில் கடந்த 2009இல் இருந்து மொத்தம் 12 பேர் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உள்ளனர். இவர்களில் சுஜித்தின் சம்பவம்தான் பெரிய அளவில் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

         இதுவரை தமிழகத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தவர்களின் பட்டியல்: 2009-பிப்ரவரி 22ஆம் தேதி 6 வயது மயோ என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். 30 மணி நேர போராட்டத்திற்குப் பின்னர் இறந்தே மீட்கப்பட்டான்.



         2009-ஆகஸ்ட் 27ஆம் தேதி 3 வயது சிறுவன் கோபிநாத் திருவண்ணாமலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தான்.

            2011-செப்டம்பர் 8ஆம் தேதி, 8 வயது சிறுவன் சுதர்சன் திருநெல்வேலியில் 200 அடி ஆழ்துளையில் விழுந்தான். இறந்தே மீட்கப்பட்டான்.

           2012-அக்டோபர் 1ஆம் தேதி 3 வயது குணா என்ற சிறுவன் 50 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். அதிர்ஷ்டவசமாக மீட்கப்பட்டான்.



           2013-ஏப்ரல் 28ஆம் தேதி முத்துலட்சுமி என்ற சிறுமி ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. இறுதியில் மீட்கப்பட்டு, கரூர் மருத்துவமனையில் இறந்தது.

           2013-செப்டம்பர் 23ஆம் தேதி, 4 வயது சிறுமி திருவண்ணாமலை மாவட்டத்தில் இருக்கும் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தது.

           2014-ஏப்ரல் 5ஆம் தேதி மதுமிதா என்ற சிறுமி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பல்லகேசரி என்ற இடத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்தது.

           2014-ஏப்ரல் 14ஆம் தேதி, 3 வயது குழந்தை திருநெல்வேலியில் சங்கரன்கோவில் என்ற இடத்தில் ஆழ்துளையில் விழுந்தது. வெற்றிகரமாக மீட்கப்பட்டது.

           2014-ஏப்ரல் 15 ஆம் தேதி திருவண்ணாமலையில் இருக்கும் கலசப்பாக்கம் என்ற இடத்தில் ஒரு குழந்தை தவறி விழுந்தது. இறந்தே மீட்கப்பட்டது.

            2015-ஏப்ரல் 13ஆம் தேதி, 2 வயது குழந்தை ஆற்காட்டில் உள்ள 350 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தது. இறந்தே மீட்கப்பட்டது.

            2018-2 வயது குழந்தை நாகப்பட்டினம் மாவட்டத்தில் 15 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்தது. வெற்றிகரமாக மீட்கப்பட்டது.



            2019-அக்டோபர் 25 ஆம் தேதி, சுஜித் என்ற சிறுவன் திருச்சியில் உள்ள மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். 80 மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் இறந்தே மீட்கப்பட்டார்.உலகையே கையில் அடக்கி இந்த காலத்தில் ஒரு குழந்தையையும் ஆழ்துளை கிணற்றில் அடக்கி உள்ளோம்.




             ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுவது தமிழகம் மட்டுமின்றி இந்தியாவில் பல்வேறு இடங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.எனினும் குழந்தையை ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்க ஒரு முறையான கருவி இல்லை. விண்ணில் அளந்து, விண்ணில் பறந்து மண்ணில் கைவிட்டோம்.



            இன்னும் நம் மக்களிடம் விழிப்புணர்வு இல்லாமல், ஆழ்துளை கிணறு தோண்டி, தண்ணீர் இல்லாதபோது, அதை மூட வேண்டும். அவ்வாறு எதாவது மூடப்படாமல் இருக்கும் ஆழ்த்துளை கிணற்றை பார்த்தால், அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்க வேண்டும் அல்லது அந்த ஆழ்துளை கிணற்றை மூட முன் வரவேண்டும்.




                  பயனற்ற ஆழ்துளை கிணறுகளை அதிகாரிகள் கண்டறிந்து அதனை மழைநீர் சேகரிப்பு திட்டத்திற்காக பயன்படுத்த வேண்டும். ஏனெனில், ஆழ்துளை கிணறுகள் தோண்ட படுவதற்கான காரணம் நீர் இல்லாமையே ஆகும். அதனால் நிலத்தடி நீரின் மட்டத்தை அதிகரித்து ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதை குறைக்கலாம்.




              நாட்டிலேயே ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து இறக்கும் நபர்களின் எண்ணிக்கையில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது. குஜராத் முதல் இடத்தில் உள்ளது. அரசு என்னதான் சட்டங்கள் கொண்டு வந்தாலும், நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தாலும், மக்களுக்கு என்று ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும். இல்லையென்றால் இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். அரசை மட்டும் குறை சொல்லி பயனில்லை.
           
           நமக்கு அருகாமையில் இருக்கின்ற பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும். மூடுவது ஆழ்துளை கிணறு மட்டுமல்ல, ஒரு குழந்தையின் மரணமும் தான்.



          
- ரவி ரங்கா.

சனி, 2 நவம்பர், 2019

வள்ளுவரின் வலைப்பூ...

 வலைப்பூவில் விளையாடிய வள்ளுவர் கல்லூரி மாணவர்கள்

          வள்ளுவர் அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி கல்லூரி தாளாளர்  திரு க.செங்குட்டுவன் மற்றும் முதல்வர் டாக்டர் த.சாலைபற்குணன் அவர்களின் முயற்சியால், வள்ளுவர் கல்லூரியில் தமிழ் துறையில் பயில்கின்ற மாணவ  மாணவிகளுக்கு மட்டும் ஒருநாள் வலைப்பூ பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.


          வலைப்பூ பயிற்சிப் பட்டறை நடத்த  வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் முதன்மை கருத்தாளராகச் செயல்பட்டார். அவருடன் முனைவர் அ. கோவிந்தராஜ் அவர்களும் பங்கேற்றார்.


வலைச் சித்தார் திண்டுக்கல் தனபாலன்

பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்ட மாணவ மாணவியருக்கு தனித்தனியே கணினிகள் ஒதுக்கப்பட்டது. அவர்களுக்கு உதவியாக ஆசிரியர்கள் இருந்தார்கள்.

              பெரிய திரை கொண்டு தனபாலன் அவர்கள் வலைப்பூ உருவாக்குகின்ற முறையை படிப்படியாக செய்து காண்பித்தார். அவர் காட்டுகின்ற வழியில் மாணவ மாணவிகள் என்று அனைவருக்கும் ஒரு வலைப்பூக்களை உருவாக்கினோம். தனபாலன் எந்தவிதமான சிறு கோபமும் இன்றி மலர்ந்த முகத்துடன் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்தார். தெரியாத மாணவர்களுக்கு அவர்களது கணினியின் அருகே சென்று கற்றுக் கொடுத்தார். எத்தனை முறை கேட்டாலும் முகம் சலிக்காது கற்றுக் கொடுத்தார். இறுதியில் அனைவருக்கும் ஒரு வலைப்பூ உருவாக்கப்பட்டது.நிதானமாக செயல்பட்டு அனைவருக்கும் நிரந்தரமான ஒரு வலைப்பூ கிடைத்தது.
   

           
               வலைப்பூ உருவாக்கியதுடன் தனபாலன் எல்லோரும் ஒரு படைப்பை வெளியிட வேண்டும் எனக் கூறினார். அவரின் சொல்லுக்கு இணங்க அனைவரும் ஒவ்வொரு படைப்பையும் வெளியிட்டனர்.


              திண்டுக்கல் தனபாலன் அவர்கள் அனைத்து மாணவர்களையும் ஒரு சிறு குழந்தை போல் பாவித்து அவர்களுக்கு ஏற்ற வகையில் கற்றுக் கொடுத்தார். அனைவருக்கும் வலைப்பூ உருவாக்கி அதன் பயனை விலக்கி கூறிய மகிழ்ச்சியில் அமர்ந்து கொண்டிருக்கிறார். மாணவ மாணவிகளுக்கு வலைப்பூ பற்றி இருந்த சந்தேகங்களை மாணவர்களை கேட்க சொல்லி அதற்கு உண்டான முடிவையும், தீர்வு முறையும் கூறினார்.


கல்லூரித் தாளாளர்-தனபாலன்.

             கல்லூரியில் பயிற்சிப் பட்டறை நடத்திய முனைவர் கோவிந்தராஜ் அவர்களும், திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும், கல்லூரி தாளாளர் திரு க.செங்குட்டுவன் நன்றி கூறினார்.
          
            சிறப்பான பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்த கல்லூரி நிர்வாகத்திற்கும், கணினித்துறை ஆசிரியர்களுக்கும், தமிழ்த்துறை ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த நன்றி 🙏
-ரவி ரங்கா.





வெள்ளி, 1 நவம்பர், 2019

காதல் கவிதை

மூழ்கத்_தெரிந்த🙇
எனக்கு🤴
வெளியே வர🚣
தெரியவில்லை🙅🏻‍♂️

உன்👸🏻
நினைவுகளில்_இருந்து💌♥️